கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.;
மண்மங்கலம் அருகே உள்ள தூளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தாயி (வயது 70). இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று வீட்டின் அருகே உள்ள 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி அந்த ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.