அரசு பள்ளியில் மேஜிக் நிகழ்ச்சி
பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் மேஜிக் நிகழ்ச்சி நடந்தது.;
பொள்ளாச்சி,
மாணவர்களின் திறன்களை முழுமையாக வளர்க்கும் வகையில் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாதந்தோறும் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து திறம்பட கேள் என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர். இதன் 25-வது நிகழ்வாக பள்ளி வளாகத்தில் மேஷிக் ஷோ நடத்தப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஆசிரியர் மலர்கண்ணன் மேஜிக் ஷோவை நடத்தினார். பள்ளி மாணவ-மாணவிகள் முன் சுமார் 20 வகையான மேஜிக் நடத்தப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் குழந்தைகளின் மனதை உற்சாகப்படுத்தி, அவர்களை பள்ளிக்கு வரவைக்கும் என்று தமிழாசிரியர் பாலமுருகன் கூறினார்.