விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம்
விருதுநகரில் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நடைபெற்றது.;
விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 33 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் 36 திட்டப்பணிகள் பொதுநிதியிலிருந்து மேற்கொள்ளுவதற்கான தீர்மானமும் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.