ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு

ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.;

Update:2023-06-18 03:00 IST

கூடலூர்

கூடலூர் தாலுகா தேவாலா அருகே வனப்பகுதியின் கரையோரம் உள்ள கூவமூலா கிராமத்துக்குள் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது. இதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து பந்தலூர் வனச்சரக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் வனச்சரகர் சஞ்சீவி உத்தரவின் பேரில் வனவர் செல்லதுரை தலைமையிலான வன பணியாளர்கள் விரைந்து வந்தனர். அப்பகுதியில் பதுங்கி இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து கீழ்நாடுகாணி வனப்பகுதியில் விட்டனர். அதன் பின்னரே கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, மலைப்பாம்பு மட்டுமின்றி வனவிலங்குகள் ஊருக்குள் வந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். அதன் பேரில் விரைந்து வந்து பாதுகாப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்