வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
பொறியியல் பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
தெற்கு ரெயில்வேயின் திருச்சி, மதுரை, சென்னை கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகளும், திருவனந்தபுரம் கோட்டத்துக்குட்பட்ட எர்ணாகுளம் யார்டில் பொறியியல் பணிகளும் நடைபெற உள்ளன. இப்பணிகள் காரணமாக சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதாவது குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16128) வருகிற 14-ந்தேதி வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் 40 நிமிடங்களும், 21-ந் தேதி 45 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் எழும்பூர்- மதுரை செல்லக்கூடிய வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12635) வருகிற 8, 9, 12, 13 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16127) வருகிற 9-ந் தேதி 60 நிமிடங்களும், 16-ந் தேதி 20 நிமிடங்களும், 17-ந்தேதி 10 நிமிடங்களும், 20-ந்தேதி 70 நிமிடங்களும், 21, 22, 23, 26 ஆகிய தேதிகளில் சுமார் 135 நிமிடங்களும் வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.