புகையிலை விற்ற கடைக்காரர் கைது
புகையிலை விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.;
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குருகாபுரம் மேல தெருவை சேர்ந்த பொன்ராஜ் (வயது 54) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். இதில் அங்கு தடை செய்யப்பட்ட 130 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொன்ராஜை கைது செய்த போலீசார் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.