கொடுமுடி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்

கொடுமுடி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2023-08-01 22:12 GMT

கொடுமுடி

கொடுமுடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக இருப்பவர் தீ.பழனிச்சாமி. இவர் சமீபத்தில் அஞ்சூர், இச்சிப்பாளையம் ஊராட்சிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் 100 நாட்கள் வேைல குறித்த 4 ஆண்டுகளுக்கான வரவு- செலவு கோப்புகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பில் கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தி் நேற்று மதியம் 2.30 மணி அளவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, பத்மனாபன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பிரகாஷ், செயலாளர் புனிதா ரமேஷ், பொருளாளர் டி.கே.ராஜ்குமார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் எங்களை நேரில் சந்தித்து பேச்சுவாாத்தை நடத்த வேண்டும் என்று கூறினர். இதையடுத்து ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சூர்யா நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறுகையில், 'இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். இதில் சமாதானம் அடைந்த ஊராட்சி தலைவர்கள் தங்களுடைய உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு இரவு 7.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்