வீட்டிற்குள் புகுந்த பாம்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு;

Update:2023-08-03 00:15 IST

தொண்டி

திருவாடானை தாலுகா அரசத்தூர் வடக்கு குடியிருப்பைச் சேர்ந்தவர் சேகர். இவரது வீட்டிற்குள் திடீரென கருநாகம் ஒன்று புகுந்துள்ளது. இதனைக் கண்ட வீட்டில் இருந்தவர்கள் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டு வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடினர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சேகர் வீட்டிற்குள் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீள கருநாகத்தை பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்