திருப்பரங்குன்றத்தில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி

திருப்பரங்குன்றத்தில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி செய்தார்;

Update:2023-08-10 05:15 IST

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை முயற்சி

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் லிங்கம்மாள்(வயது 38). இவர் திருப்பரங்குன்றம் செங்குன்றம் திருவள்ளுவர் முதல் தெருவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் லிங்கம்மாள் அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

விசாரணை

பின்னர் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த லிங்கம்மாளை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து லிங்கம்மாள் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழுத்தை அறுத்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்