காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆரணியில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-07-30 15:34 IST

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் முனுசாமி தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 36), கார் சொந்தமாக வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரும் விஜயலட்சுமி (35) என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு சஞ்சய் (16) லோகேஷ்குமார் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

விஜயலட்சுமிக்கு அவ்வப்போது செல்போனில் அழைப்பு வரும். பேசியபின்னர்

அந்த எண்களை அவர் அழித்து விடுவார் என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று  இரவு விஜயலட்சுமிக்கு ஒரு போன் வந்துள்ளது. அதை யார் என கேட்டதற்கு அந்த எண்ணை அவர் அழித்துவிட்டார்.

இதனால் சத்தமாக பேசிவிட்டு ஆறுமுகம் வீட்டை விட்டுச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது விஜயலட்சுமி தூக்குப்போட்டு கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் ஆறுமுகம் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்