புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது செய்யப்பட்டாா்.;
பிரம்மதேசம்,
பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குப்பம் கிராம மெயின் ரோடு பகுதியில் உள்ள ஏழுமலை மனைவி கோமதி(வயது 35) என்பவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கோமதியை கைது செய்த போலீசார், கடையில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.