வடகோவனூரில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது

`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வடகோவனூரில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

Update: 2023-04-13 18:45 GMT

கூத்தாநல்லூர்:

`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வடகோவனூரில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

சேதமடைந்த சுகாதார வளாகம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடகோவனூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மகளிர் சுகாதார வளாக கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது.

இதனால் கட்டிடத்தில் இருந்த சிமெண்டு காரைகள் பெயர்ந்து, கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு, சில பகுதிகள் இடிந்து கீழே விழுந்து விட்டது. இதனால், நாளடைவில் அந்த மகளிர் சுகாதார வளாகத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர், சேதமடைந்த மகளிர் சுகாதார வளாகத்தை சுற்றிலும் செடி கொடிகள் வளர்ந்து அடர்ந்த காடு போல் காட்சியளித்தது.

தினத்தந்தி செய்தி எதிரொலி

எனவே சேதமடைந்த மகளிர் சுகாதார வளாக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த சுகாதார வளாக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக மகளிர் சுகாதார வளாக கட்டிடத்தை கட்டிக்கொடுத்தனர். இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவருக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்