நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள்

நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.;

Update:2025-12-06 13:44 IST

கோப்புப்படம் 

நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06012) மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து 8-ந்தேதி (நாளை மறுநாள்) மதியம் 3.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06011) மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.

இதேபோல், திருவனந்தபுரம் வடக்கு - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் வடக்கில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06108) மறுநாள் காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து 8-ந்தேதி (நாளை மறுநாள்) மதியம் 1.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06107) மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

மேலும், கோவை - எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06024) மறுநாள் காலை 9.20 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து 8-ந்தேதி (நாளை மறுநாள்) பகல் 12.20 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06023) அதேநாள் இரவு 10.30 மணிக்கு கோவையை சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்