சாராயம் விற்ற வாலிபர் கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-20 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி பகுதியில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருக்கண்ணங்குடி ஆற்றங்கரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருக்கண்ணங்குடி திருவாசலடி தெருவை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன் (வயது 29) என்பதும், அவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்துகீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்