இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.07 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த இந்திய அணி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
சற்று உயர்ந்த தங்கம் விலை... புதிய உச்சத்தில் வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து தினமும் புதிய வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, புதிய உச்சத்தில் ஒரு கிராம் ரூ.226-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து
சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் நீடிக்கும் காற்று மாசு, கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிப்பு
டெல்லியில் நீடிக்கும் காற்று மாசு, கடும் பனிமூட்டத்தால் இன்று (சனிக்கிழமை) 700 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி புறப்பட வேண்டிய 88 விமானங்களும், வந்து சேர வேண்டிய 89 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு காலையில் மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்
மலையாள சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் (69) காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை காலமானார்.
2024 -25இல் வட்டி ரூ.62,456 கோடி: 4 ஆண்டாக கடன், வட்டியில் தமிழகம் முதலிடம் - அன்புமணி
தமிழ்நாட்டின் மொத்தக்கடன் ரூ. 9 லட்சத்து 55 ஆயிரத்து 690 கோடியாக உயர்ந்திருக்கிறது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை 22ம் தேதி நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும், நாளையும் ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நர்சுகள் மீண்டும் போராட்டம்
சென்னை சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்திய நர்சுகள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைந்து வைக்கப்பட்டிருந்தனர்.
விக்கிரவாண்டி அருகே ஆற்றுப் பாலத்தில் மோதி ஆம்னி பேருந்து விபத்து - 35-க்கும் மேற்பட்டோர் காயம்
அதிவேகமாகச் சென்ற ஆம்னி பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மைய தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.