அந்தியூரில் சலவை-சவர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் சலவை-சவர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்;

Update:2022-12-31 03:00 IST

அந்தியூர்

அந்தியூர் தாசில்தார் அலுவலகம் அருகில் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தியூர் சுற்றுவட்டார சவர மற்றும் சலவை தொழிலாளர்களுக்காக அரசு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில தலைவர் ஆரூர் ரமேஷ் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக ஈரோடு மாவட்ட அமைப்பாளர் பிரபு, தென்மண்டல அமைப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெகன், மாநில இளைஞரணி செயலாளர் கணேஷ் உள்பட 100-க்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்