ஓட்டுனர் உரிம ஆன்லைன் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூல்

ஓட்டுனர் உரிம ஆன்லைன் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-19 18:20 GMT

திருப்பத்தூர் அருகே எலவம்பட்டி பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் ஓட்ட ஓட்டுனர் உரிமம் பெற பொதுமக்கள் பலர் செல்கின்றனர். அங்குள்ள அதிகாரிகள் ஆன்லைனில் பதிவு செய்ய சொல்கிறார்கள். அதற்காக அருகில் உள்ள தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு சென்றால் ரூ.2,500 கொடுத்தால் தான் ஆன்லைனில் பதிவு செய்வோம், இல்லையென்றால் முடியாது எனக் கூறுகின்றனர்.

ஓட்டுனர் உரிமம் பெற அரசு குறைந்த கட்டணமே நிர்ணயித்துள்ளது. ஆனால் அவர்கள் ஆன்லைன் பதிவை காரணம் காட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்