அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை கல்வி மேலாண்மை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்-பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

மாநிலம் முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-22 18:45 GMT


மாநிலம் முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பதிவேற்றம்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:-

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சார்ந்த விஷயங்கள் மற்றும் மாற்றுச்சான்றுகளை கல்வி மேலாண்மை தளத்தில்(எமிஸ்) வரும் 31-ந் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்த விவரங்களின்படி மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்ட பொருட்கள் வினியோகம் உள்பட அனைத்து திட்டங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உறுதி ெசய்ய வேண்டும்

அதேபோல 5 மற்றும் 8-ம் வகுப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு எமிஸ் தளத்திலிருந்து மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு அந்த மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு பிற பள்ளிகளில் சேர்ந்துள்ளார்களா என்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த பிரச்சினையில் கூடுதல் கவனத்துடன் செயல்பட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

.......................

Tags:    

மேலும் செய்திகள்