அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை

செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.;

Update:2023-02-04 00:15 IST

செங்கோட்டை:

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி அறிவுரையின் படி செங்கோட்டையில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நகர அ.தி.மு.க சார்பில் போலீஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு நகர செயலாளர் கணேசன், நகரசபை தலைவர் ராமலட்சுமி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் தங்கவேலு, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் உசேன், சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் ஞானராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்