பொதுமக்கள் நல்லுறவு ஆலோசனை கூட்டம்

சேந்தமங்கலத்தில் பொதுமக்கள் நல்லுறவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-04-13 00:20 IST

சேந்தமங்கலம்

சேந்தமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் குற்றங்களை தடுப்பதற்காக போலீசார் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நாமக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- சேந்தமங்கலம் பகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் இரவு நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடன் சில போலீசார் தங்கி அவர்கள் குறைகளை கேட்டு அறிந்து அதை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பதற்றமான பகுதிகள் எது என கண்டறிந்து அங்கு போலீசார் கூடுதலாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும். சேந்தமங்கலம் பகுதியில் குற்றங்களை தடுப்பதற்காக போலீசாருக்கு உதவிடும் வகையில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்த ஊராட்சி பிரதிநிதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள குறைகளை போலீசாரிடம் தெரிவித்தனர். அப்போது பெரிய குளம் ஊராட்சி பகுதியில் கள்ள நோட்டு மாற்றி தரும் கும்பலும், பல்வேறு இடங்களில் புதையல் எடுப்பதாக கூறி வெளிமாவட்டத்தை சேர்ந்த பலரையும் ஏமாற்றும் கும்பலும் நடமாடுவதாக கூறினர். போலீசார் அந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். கூட்டத்தில் சேந்தமங்கலம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடுக் கோம்பை விஜய் பிரகாஷ், பொம்ம சமுத்திரம் செந்தில்குமார், அக்கியம்பட்டி விமலா பாலசுப்பிரமணியம், பழையபாளையம் அமுதா கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்