வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில்விவசாயிகளுக்கு பயிற்சி

ஆண்டிப்பட்டி அருகே வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update:2023-03-19 00:15 IST

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் உள்ளது. இங்கு தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பண்ணை எந்திரம் மயமாக்குதல் மற்றும் டி.எம்.வி 14 நிலக்கடலை வயல் விழா பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆராய்ச்சி நிலைய தலைவரும், பேராசிரியருமான மதன்மோகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பரமேஸ்வரி, விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் திலகர், விதை சான்று அலுவலர் முத்து சேகர் ஆகியோர் தொழில்நுட்பம் சம்பந்தமாக பேசினர். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்