மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவில் இழுபறி நீடிப்பு
மாநிலங்களவை தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளர்களை தேர்வுசெய்ய அதிமுகவின் உயர்நிலை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது.;
சென்னை,
ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக சார்பில் 2 உறுப்பினர்கள் தேர்வாக செய்யப்பட உள்ளனர். இதனால், அதிமுக சார்பில் மாநிலங்களை உறுப்பினர் பதவிக்கு முன்னிறுத்தலாம் என்பது குறித்து அக்கட்சி கடந்த சில தினங்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் எம் எல் ஏக்கள் செம்மலை, இன்பதுரை ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பில் தச்சை கணேச ராஜா, கிரித்திகா முனியசாமி உள்ளிட்டோரின் பெயரையும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை இறுதி செய்ய தயாராக இருந்தாலும் தற்போது வரை ஓபிஎஸ் இறுதி செய்யாமல் உள்ளதால் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.