விமானப்படை கல்லூரியில் ஏர்மார்ஷல் ஆய்வு
கோவையில் விமானப்படை கல்லூரியில் ஏர்மார்ஷல் ஆய்வு செய்தார்.;
இந்திய விமானப்படை ஏர்மார்ஷல் கே.அனந்தராமன் கோவையில் உள்ள விமானப்படை நிர்வாக கல்லூரிக்கு வந்தார். அங்கு அவருக்கு கமாண்டன்ட் ஆர்.வி.ராம்கிஷோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட விமானப்படை ஏர்மார்ஷல் கே.அனந்தராமன், விமானப்படை நிர்வாக கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார்.
மேலும் அவர், விமானப்படை அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபடும் தளத்துக்கு சென்று வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், சிறந்த முறையில் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்களை பாராட் டினார்.
பின்னர் அவர், அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து, மாறி வரும் உலகளாவிய சூழ்நிலையில் எதிர்கால சவால்களை எதிர் கொள்ள அடுத்த தலைமுறையினரை தயார்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இதில் விமானப்படை நிர்வாக கல்லூரி உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.