ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணியில் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி
தவெகவில் கட்டமைப்பே கிடையாது என நயினார் நாகேந்திரன் கூறினார்.;
கிருஷ்ணகிரி,
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
திமுக - தவெக இடையேதான் போட்டி விஜய் சொல்லி வருகிறார். இந்தியாவையே நாளை பிடித்துவிடுவேனு கூட விஜய் சொல்லலாம்.. ஆனால், இது சினிமா அல்ல. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டும், வேட்பாளர்கள் விலைபோகாமல் இருக்க வேண்டும். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இருந்து 10 வேட்பாளர்களின் பெயர்களை விஜய்யால் சொல்ல முடியுமா? கட்சிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும். தவெகவில் கட்டமைப்பே கிடையாது. குறையாக சொல்லவில்லை.
ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணியில் தற்போதைக்கு இல்லை. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை. 2026 தேர்தலில் திமுகவுக்கு மாற்று அரசாக தேசிய ஜனயாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். இந்த கருத்துள்ள எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.