நாமகிரிப்பேட்டை பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன்ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனை
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அவை செழித்து வளர்ந்துள்ள நிலையில் மரவள்ளிக்கிழங்குகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு ஒரு டன் ரூ.13 ஆயிரத்துக்கு விலைபோனது. தற்போது டன்னுக்கு ரூ.1,000 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.14 ஆயிரத்துக்கு விலைபோவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.