விபத்தில் தனியாா் நிறுவன ஊழியர் சாவு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியர் இறந்தார்.;
தூத்துக்குடி கீழுர் வாடித் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் துறைமுகம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு பீச் ரோட்டில் திரும்பியபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.