முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே உள்ள பூக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் தேவகோட்டையில் ஸ்டூடியோ வைத்துள்ளார். இவர் முளைப்பாரி திருவிழாவுக்கு சொந்த ஊரான பூக்குளம் கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் திருவிழா முடிந்து பூக்குளத்தில் இருந்து தேவகோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முதுகுளத்தூர் அருகே உள்ள உடைகுளம் மெயின் ரோட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கீழத்தூவல் போலீசார் விரைந்து சென்று சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.