அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;

Update:2023-03-30 01:27 IST

நெல்லை மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தங்கம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கன்வாடி மையங்களின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்