காரை தீவைத்து எரித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

வள்ளியூரில் காரை தீவைத்து எரித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-12-16 00:44 IST

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 41). வள்ளியூர் வடக்கு ரதவீதியில் நிறுத்தி இருந்த இவரது காரை மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். இதுகுறித்து கணேசன், வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வள்ளியூரைச் சேர்ந்த முருகனை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக வள்ளியூரை சேர்ந்த ஆறுமுகம் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்