நெகிழி ஒழிப்பு பேரணி

சேரன்மாதேவி ஸ்காட் கல்வியியல் கல்லூரி சார்பில் நெகிழி ஒழிப்பு பேரணி நடந்தது.;

Update:2023-06-08 00:53 IST

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி ஸ்காட் கல்வியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு வனத்துறை இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெகிழி ஒழிப்பு பேரணியை வெள்ளாங்குளி கிராமத்தில் நடத்தியது. கல்லூரி முதல்வர் பியூலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக வனத்துறை அதிகாரி குணசீலன் மற்றும் வனக்காவலர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வெள்ளாங்குளி கிராம பஞ்சாயத்து தலைவர் முருகன், துணைத்தலைவர் ராஜேஷ், வெள்ளாங்குளி விவேகானந்தா தொடக்கப்பள்ளி தாளாளர் சீனிவாசன், பள்ளி செயலாளர் ராஜகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா ஆகியோர் பேசினார்கள். தொடர்ந்து நெகிழி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பின்னர் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்காட் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் சங்கரேஸ்வரி, உடற்கல்வி பேராசிரியர் அலிஸ் பொன்ராணி ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில், உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜஸ்டின் திரவியம் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் சுந்தரராஜன் மரங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் சேகர், பேராசிரியை ஜெயஸ்ரீ லெட்சுமி, நிர்வாக அலுவலர் ஜெயபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்