ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம்-கலெக்டர் தகவல்

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.;

Update:2023-09-03 01:17 IST

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டம், மல்லல் ஆதிதிராவிடர் நலத்தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்-1, உஞ்சனை ஆதிதிராவிடர் நலத்தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்-2, மற்றும் அதிகரம் உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் -2 (ஆங்கிலம்-1, அறிவியல்-1) என மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனை அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம் மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் வழங்கப்படும். பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

இந்த தற்காலிக பணி நியமனம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை பணிக்கு தேர்வு செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2024 வரை மட்டுமே ஆகும். விண்ணப்பிக்க விரும்புவோர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் 4-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்