கபிலர்மலை அருகே பெட்டிக்கடையில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
பரமத்திவேலூர்:
கபிலர்மலை அருகே இருக்கூர், செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் செஞ்சுடையாம்பாளையத்தில் பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அதில் பெட்டிக்கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற கடையின் உரிமையாளர் ரங்கசாமி மகன் பிரேம்குமார் (வயது 29) என்பவரை கைது செய்தனர்.