ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீசார் நல்லாகவுண்டனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற வாலிபரை சோதனை செய்தபோது அவர் 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்த நல்லாகவுண்டனூரை சேர்ந்த மேகநாதன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.