மூதாட்டியை அடித்துக்கொன்ற மகன் கைது

Update:2023-06-11 00:15 IST

தொண்டி, 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தெற்கு தளிர் மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மிக்கேல். இவரது மனைவி ஜெயசீலி (வயது 75). கணவர் இறந்து விட்டதால் இவர் புதுக்குடி கண்மாய் அருகே தனியாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை அவரது மகன் குமார் தனது தாயை பார்க்க சென்றார். அப்போது வீட்டு வாசலில் ஜெயசீலி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த ாமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ. ஜி.துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக தொண்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஜெயசீலியின் மூத்த மகன் அருள்செல்வம் என்ற அய்யர் தனது தாயை அடித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அருள் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். வீடு கட்டுவதற்கு இடம் தராததால் தாய், தந்தையுடன் அவர் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாகவும், தந்தை இறந்த பின்னர் அவரின் பெயரில் வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரத்தை எடுப்பதற்கு அருள்செல்வம் தாயாரிடம் வாக்குவாதம் செய்ததாகவும்,. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த அருள் செல்வம், ஜெயசீலியை விறகு கட்டையால் தலையில் அடித்து கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்