குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update:2022-08-02 19:25 IST

கோத்தகிரி, 

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் காவல்துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் கோத்தகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதற்கு கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமை தாங்கினார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிந்து, ஏட்டு பார்வதி ஆகியோர் கலந்துகொண்டு, பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது, பொது இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாக ஏற்படும் தொல்லைகள், படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் மீண்டும் படிப்பை தொடர்வது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏதேனும் அவசர உதவியை பெற பள்ளி மாணவ-மாணவிகள் 181, 1098, 1930 ஆகிய கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். இதனைதொடர்ந்து கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்