கார்ட்டூன் படங்கள் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
குத்தாலம் பேரூராட்சி சார்பில் கார்ட்டூன் படங்கள் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு;
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரில் (கார்ட்டூன்) கருத்து வரை படங்கள் வைக்கப்பட்டுள்ளன. "பிளாஸ்டிக் பை களை ஒழிப்போம் துணி பைகளை பயன்படுத்துவோம்" "குப்பை களை தரம் பிரித்து வழ ங்குவோம்", "எனது குப்பை எனது பொறுப்பு" உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய அந்த வரை படங்களை பே ரூராட்சி வளாகங்கள் மக்கள் அதிக அளவில் கூடும் பகுதியிலும், பேரூராட்சி வார்டு பகுதிகளில் ஆங்காங்கே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிறுவியுள்ளனர். மேலும் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு மஞ்சள் பையின் அவசியத்தை உணர்த்தும் வகை யில் ரூபாய் 10-க்கு மஞ்சள் பை வழங்கும் மின்சாரதானியங்கி இயந்திரத்தையும் அமைத்துள்ளனர். ஏற்பாடுகளை பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், செயல் அலுவலர் ரஞ்சித் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த செ யலானது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.