பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-08-27 00:15 IST

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர்கள் ரமேஷ், புரட்சிதாசன், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணராஜ் வரவேற்று பேசினார். இதில் மாநிலத் துணைத் தலைவர் ராஜவேல், மாநில செயலாளர் வக்கீல் காமராஜ், சேலம் மாவட்ட தலைவர் வக்கீல் ராசா.பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மணிப்பூரில் கிறிஸ்தவர்கள், பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்