பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்

எட்டயபுரம் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;

Update:2023-05-02 00:30 IST

எட்டயபுரம்:

எட்டயபுரம் கீழ ரத வீதி புது அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி, பிராயசித்த ஹோமம், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

நேற்று காலை 7 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மந்திரஹோமம், மகா அபிஷேகம், விமான கலசத்திற்கும், சுவாமி பாலமுருகனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்