வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் பந்த ஆஞ்சநேயர் பிரதிஷ்டை
வாலாஜா அருகே வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் பந்த ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.;
வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை பசும்பொன் நகரில் உள்ள வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் பந்த ஆஞ்சநேயர் பிரதிஷ்டை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வடை மாலை சாத்தப்பட்டது. கலச தீர்த்த பூஜை, அபிஷேக ஆராதனை, தத்வார்சனை ஆகியவற்றை ஆஞ்சநேயருக்கு செய்து, ஜலகுரு பழனி சுவாமிகள் அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா என பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி தலைவர் வாசுதேவன் சுவாமிகள் செய்திருந்தார்.