பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

நாட்டறம்பள்ளியில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2023-04-02 18:49 IST

நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதியில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன், முருகன் மற்றும் விநாயகர் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் கும்பாபிஷேக விழா நடக்காததை கண்டித்து நாட்டறம்பள்ளி பா.ஜ.க. சார்பில் ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் பேரூராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது. ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பாஜக மாவட்ட தலைவர் வாசுதேவன், மாவட்ட செயலாளர்கள் கவியரசு, தண்டாயுதபாணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில், முருகர் மற்றும் விநாயகர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதில் நாட்டறம்பள்ளி பேரூராட்சி பா.ஜ.க. கவுன்சிலர் இல.குருசேவ் மற்றும் மகளிர் அணியினர், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்