பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
தேவகோட்டையில் பூத் கமிட்டி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
தேவகோட்டை
தேவகோட்டை நகரம், வட்டாரம் காங்கிரஸ் பூத் கமிட்டிகளை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆய்வு செய்து, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்திற்கு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் அப்பச்சி சபாபதி, பூமிநாதன், தேவகோட்டை நகர கிழக்குத் தலைவர் சஞ்சய், மாநில இலக்கிய அணிச் செயலாளர் சுவாமிநாதன், வட்டாரத்தைச் சேர்ந்த மனோகரன், இளங்குடி முத்துக்குமார், தேவகோட்டை நகர் வேலு, காளீஸ்வரன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்