இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
மாத்ரே தலைமையிலான இந்திய அணி, யூசப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மாத்ரே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
தமிழ்நாட்டின் அமைதியை சீ்ர்குலைக்க நினைப்பது திமுக அரசுதான் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் - ராமதாஸ் அறிவிப்பு
கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அசாம் பயணம்: பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்...!
பிரதமர் மோடி அசாமில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
தவெக சார்பில் நாளை கிறிஸ்துமஸ் விழா - விஜய் பங்கேற்பு
தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம். மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நாளை (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது.
ஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி போராடி தோல்வி
இறுதியில், 102.5 ஓவரில் இங்கிலாந்து அணி 352 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போராடி தோல்வியடைந்து. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துள்ளது.
மேலும் 5 போட்டிகள் என்ற தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி
தமிழக வளர்ச்சியில் பா.ஜனதாவுக்கு அக்கறை இல்லை என்று செந்தில்பாலாஜி கூறினார்.
இளையோர் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
இந்தியா- பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்
2026 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள்: புதிய வேகமெடுக்க உள்ள இந்திய பங்குச் சந்தை..!
கிரகங்களின் கூட்டுச்சேர்க்கை, முக்கியமான விண்வெளி திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என தெரிவிக்கிறது. மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சிகளிடம் நேரடியாக குறுக்கு விசாரணையை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.