கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2022-12-04 23:42 IST

ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. நேற்று காலை இந்த கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அங்கிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்