கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு;

Update:2022-12-18 00:15 IST

சேரன்மாநகர்

கோவை விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகரில் உள்ள விஸ்வேஸ்வரா நகரில் செல்வ விநாயகர் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு விவேக் என்பவர் பூஜை செய்து வருகிறார். இவர் இரவில் பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

மறுநாள் வந்து பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணத்தை காணவில்லை. இது குறித்து கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர் சம்பத்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்