கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
சீர்காழி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்;
சீர்காழி:
சீர்காழி அருகே திட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு, நேற்று காலை கோவிலை திறந்துள்ளனர். அப்போது கோவிலின் உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்து பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடை ந்தனர். இதுகுறித்து திட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பே ரில் கோவிலுக்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.