குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.;
மன்னார்குடி;
மன்னார்குடி பட்டக்கார தெருவை சேர்ந்தவர் குணா என்கிற சற்குணம் (வயது 26). இவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கஞ்சா வியாபாரி சற்குணத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன், கஞ்சா வியாபாரி சற்குணத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மன்னார்குடி கிளை சிறையில் இருந்த சற்குணம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.