மதுபோதையில் மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர் - நாகையில் பயங்கரம்

வலியால் அலறித்துடித்த இலக்கியாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.;

Update:2025-12-24 14:43 IST

நாகை,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவரது மனைவி இலக்கியா. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இலக்கியா கத்திரிக்குளம் பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான மதன்ராஜ், மது குடிக்க பணம் கேட்டு தனது மனைவியை தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதுபோதையில் மனைவியிடம் மதன்ராஜ் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இலக்கியா அருகே உள்ள மாமியார் வீட்டிற்கு கிளம்பிச் சென்றிருக்கிறார்.

அப்போது அவரை துரத்திச் சென்ற மதன்ராஜ், தன்னிடம் இருந்த அரிவாளால் தனது மனைவியின் வலது கையை வெட்டியுள்ளார். பின்னர் அந்த கையை எடுத்துச் சென்று குளத்தில் வீசியுள்ளார். இதனிடையே, கை வெட்டப்பட்டு வலியால் அலறித்துடித்த இலக்கியாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மதன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்