லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் மீது வழக்கு

தம்மம்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2023-10-23 00:15 IST

தம்மம்பட்டி

தம்மம்பட்டி போலீசார் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜோதி நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 37), முஸ்லிம் தெருவை சோ்ந்த தாகிர் பாஷா (65), காந்தி நகரை சேர்ந்த கனகராஜ் (89) ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்