பரமத்தி வேலூரில் மார்கழி மாத கலை, இலக்கிய பக்தி திருவிழா- ஆன்மிக சொற்பொழிவு

தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு தலைப்பில் கலை, இலயக்கிய திருவிழா நடைபெறுகிறது.;

Update:2025-12-21 13:15 IST

பரமத்தி வேலூர் அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை, ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில், இளைஞர் குழு மற்றும் நண்பர் குழு இணைந்து மார்கழி மாத கலை இலக்கிய பக்தி திருவிழாவை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 16-ஆம் தேதி பரமத்தி வேலூர் மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில் தொடங்கியது.

தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு தலைப்பில் கலை, இலயக்கிய திருவிழா நடைபெறுகிறது. ஆன்மிகம், இசை, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நேற்று சைவ வழி துணை என்ற தலைப்பில் சைவ சமய சொற்பொழிவாளர் திருபுவனவாயில் சிவமாதவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளையின் இணைச் செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். கரூர் ஸ்ரீமுசுகுந்த சக்கரவர்த்தி சிவனடியார் திருக்கூடத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். முடிவில் அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளையின் அறங்காவலர் பழனியப்பன் நன்றி கூறினர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சிவ பக்தர்கள் கலந்து கொணடனர்.

இந்த கலை இலக்கிய திருவிழா ஜனவரி மாதம் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்