எஸ்.புதூர் அருகே-அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 6 பேர் மீது வழக்கு

எஸ்.புதூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-04-19 00:15 IST

எஸ்.புதூர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆர்.பாலக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை மாத தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதையொட்டி அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றதாக ஆர்.பாலக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி அப்பாத்துரை கொடுத்த புகாரின் பேரில் ஆர்.பாலக்குறிச்சி கார்த்திகேயன், ரெகுநாதபட்டி நாகராஜன், சீகம்பட்டி செல்வம், வைரவன்பட்டி கோவை செல்வம், விடத்திலாம்பட்டி மாணிக்கம், கோபால்பட்டி செல்வம் ஆகிய 6 பேர் மீது அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்